நடிகர் விஜய்சேதுபதியின் கோரிக்கைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்

3 weeks ago 5

சென்னை,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணுவின் நூற்றாண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். நல்லகண்ணு குறித்த 'நூறு கவிஞர்கள் - நூறு கவிதைகள்' என்ற கவிதை நூலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்தசூழலில், நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழாவில் நடிகர் விஜய்சேதுபதியும் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "விடுதலை போராட்ட வீரர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு, பாடப்புத்தகத்தில் இடம்பெற வேண்டும். காலில் செருப்பு, தீபாவளி, பொங்கல் போனஸ், 8 மணி நேர வேலை, இதெல்லாம் நல்லகண்ணு போன்றவர்கள் ரத்தம்சிந்தி பெற்றுத் தந்தது. இது பற்றி தெரியாத பலரில் நானும் ஒருவன்; இதனால் பலனடைந்த பலர்களிலும் நானும் ஒருவன்" என்று விஜய் சேதுபதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதியின் கோரிக்கைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "விடுதலைப் போராட்ட வீரர் போற்றுதலுக்குரிய நல்லகண்ணு அய்யா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில், அவரின் வாழ்க்கை குறிப்பை பாடப்புத்தகத்தில் இணைப்பது குறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆலோசனையைப் பெற்று முடிவு செய்யப்படும்" என்று அதில் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

Read Entire Article