நடிகர் ரஜினிகாந்த் பூரண நலம் பெற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ரசிகர்கள் சிறப்பு வழிபாடு

5 months ago 31

மதுரை: நடிகர் ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று அவரது ரசிகர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். அப்போது அவர்கள் பெண்களுக்கு மாங்கல்ய பிரசாதம் வழங்கினர்.

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் செப்.30-ம் தேதி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரஜினிகாந்த் பூரண குணமடைய வேண்டும் என மதுரையில் அவரது ரசிகர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும் லதா ரஜினிகாந்தின் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டும் என்பதற்காக அம்மன் சன்னிதி முன்பாக மாங்கல்ய பிரசாதம், வளையல், குங்குமம் உள்ளிட்டவற்றை 500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வழங்கினர்.

Read Entire Article