நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

3 months ago 28
நடிகர் ரஜினி காந்த் உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திங்கள் இரவு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட அவருக்கு இன்று காலை ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டதாகவும், 24 மணி நேரத்திற்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பார் எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் அடி வயிற்றுக்கு அருகில் ரத்த நாளம் ஒன்று பெரிதாகி இருப்பதால் அவருக்கு கடும் வலி ஏற்பட்டதாகவும், அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளன. இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் சிகிச்சை முடிந்து ரஜினி வீடு திரும்புவார் எனவும் அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Entire Article