நடிகர் மணிகண்டன் குறித்து 'குடும்பஸ்தன்' நடிகை உருக்கம்

2 days ago 3

சென்னை,

தமிழில் மணிகண்டன் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 24-ந் தேதி வெளியான படம் 'குடும்பஸ்தன்'. இப்படத்தை சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக சான்வி மேக்னா நடித்திருந்தார்.

இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 'குடும்பஸ்தன்' படம் மூலம் பேன்ஸ் கவனத்தை ஈர்த்த சான்வி மேக்னா, நடிகர் மணிகண்டன் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

"உங்களைப்போல திறமை வாய்ந்த நடிகரோடு பணிபுரிந்தது ஓர் அழகான அனுபவம். 'குடும்பஸ்தன்' படம் மூலம் அருமையான இணை நடிகர் மட்டுமன்றி சிறந்த நண்பரும் கிடைத்திருக்கிறார்" என்று தெரிவித்திருக்கிறார்.

Read Entire Article