நடிகர் நெப்போலியன் மகனின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

2 months ago 12

ஜப்பான்,

1991ல் பாரதிராஜா இயக்கத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நெப்போலியன். அதன் பின் தனது நடிப்பின் திறமையால் 1993-ல் ஹீரோவானார். கிட்டத்தட்ட 100 படங்களுக்கும் மேல் நடித்து வந்தவர் திடீரென்று நடிப்பிற்கு முழுக்குப்போட்டார். தமிழில் சுல்தான் திரைப்படத்திற்கு பிறகு இவர் நடிக்கவில்லை.

திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் போதே இவரின் பார்வை அரசியலின் பக்கம் சென்றது. தி.மு.க.வில் இணைந்து தேர்தலில் நின்று வெற்றிப்பெற்று எம்பியாக ஜொலித்தார். ஆனால்... திடீரென்று, தனது குடும்ப நலனுக்காக, அனைத்தையும் ஒதுக்கி விட்டு அமெரிக்கா சென்று செட்டிலாகி விட்டார். அங்கு ஜீவன் டெக்னாலஜீஸ் என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை ஆரம்பித்தார். இவருக்கு ஜெயசுதா என்ற மனைவியும், குணால், தனுஷ் என்ற இரு மகன்கள் உண்டு. இதில் தனுஷுக்கு நான்கு வயதாகும் போது தசை சிதைவு நோய் தாக்கியுள்ளது. தனுஷை குணப்படுத்த பல்வேறு சிகிச்சைகளை அவர் மேற்கொண்டுவந்தார். இதில் தனுஷ் ஓரளவு குணமாகவே, ஒரு தந்தையாக, தனது மகனின் வருங்காலத்தை நினைவில் கொண்டு அவருக்கு திருமணம் செய்து வைக்க தீவிரமாக முயற்சி செய்து வந்தார். இவரது முயற்சி வீண் போகவில்லை. திருநெல்வேலியை அடுத்து மூலக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் விவேகானந்தர் என்பவரின் மகளுக்கும், தனுஷுக்கும் திருமண நிச்சயதார்த்தம் வீடியோ கால் மூலம் நடந்தது.

நெப்போலியன் மகன் தனுஷுக்கு ஜப்பானுக்கு செல்ல வேண்டும் என்பது நீண்டநாள் கனவாக இருந்துள்ளது. அந்த கனவை நனவாக்கும் வகையில் தனுஷின் கல்யாணத்தையே ஜப்பானில் நடத்தி இருக்கிறார் நெப்போலியன். தனுஷின் திருமணம் இந்திய நேரப்படி இன்று காலை 8.10 மணியளவில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமின்றி தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர். தனுஷ் - அக்சயா ஜோடியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

திருமணத்தில் நடிகர் சரத்குமார், ராதிகா, சுஹாசினி, குஷ்பூ, மீனா, நடிகர் கார்த்தி அவரது மனைவி ரஞ்சனி, நடிகர் பாண்டியராஜன்,அவரது மனைவி, நடிகர் விதார்த், முன்னாள் டிஜிபி ரவி,கலா மாஸ்டர் வசந்த பவன் ரவி, அமைச்சர் நேருவின் சகோதரர் மணிவண்ணன், யூடியூப் இர்பான், ஜப்பான் நாட்டிற்காக இந்திய தூதர் சிபி ஜார்ஜ்,அவரது மனைவி ஜாய்ஸ் ஜார்ஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருமணத்திற்கு முன்னதாக அக்சயாவுடன் தனுஷ் எடுத்திருக்கும் போட்டோஷூட் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது. 

Read Entire Article