நடிகர் ஜெயம் ரவியின் 34வது படம் குறித்த அப்டேட்

3 months ago 21

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, வெளியான 'இறைவன், சைரன்' படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் தற்பொழுது 'பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

'பிரதர்' படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா தயாரித்துள்ளது. இதில் பிரியங்கா மோகன், நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் ராஜேஷ் இயக்கிய இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 'பிரதர்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 31ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் ஜெயம் ரவி நடிக்க உள்ளார். இந்த படம் ஜெயம் ரவியின் 34-வது படமாகும். எனவே இது தொடர்பான முக்கிய அறிவிப்பு நாளை காலை 10.50 மணி அளவில் வெளியாகும் என பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

We are Delighted to collaborate with @actor_jayamravi for the third time .Get ready for #JR34's MASSIVE ANNOUNCEMENT tomorrow at 10:50 AM!Stay Tuned ⏳@screensceneoffl @senthilkumarsmc @skiran_kumar @onlynikil pic.twitter.com/Fz82ZLUvEN

— Screen Scene (@Screensceneoffl) October 4, 2024

ஜெயம் ரவியின் 34 வது திரைப்படத்தை டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கப் போவதாகவும் ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கப் போவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article