புதுடெல்லி: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மொத்தம் 64.64 கோடி வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதில் ஆண் வாக்காளர்கள் 65.55 சதவீதம் எனில் பெண் வாக்காளர்கள் 65.78சதவீதமாகும். 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் 726 பெண்கள் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். 2024ம் ஆண்டில் 800 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
86 சதவீத வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ‘‘2019ம் ஆண்டு 11,692 பேர் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் 2024ம் ஆண்டு தேர்தலில் 12,459 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இவர்களில் வேட்பு மனு நிராகரிப்பு மற்றும் திரும்ப பெறுதல் உள்ளிட்டவற்றுக்கு பின் 8360 பேர் மட்டுமே போட்டியிடுவதற்கு தகுதியானார்கள். 7190வேட்பாளர்கள் தேர்தலில் டெபாசிட் இழந்தனர். இது 86 சதவீதமாகும். 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் 6923 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கது.
The post நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஆண்களை விட பெண் அதிகம் வாக்களிப்பு: தேர்தல் ஆணைய புள்ளி விவரம் வெளியீடு appeared first on Dinakaran.