புதுடெல்லி,
டெல்லியில் உள்ள மான்சரோவர் பூங்கா மெட்ரோ நிலையம் அருகே உள்ள தொழிற்சாலையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.
மேலும் இந்த தீ விபத்தில் தொழிற்சாலையின் 2வது மாடியில் உள்ள சேமிப்பு அறையில் அஜீத் (25) என்ற இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்துக்கான சரியான காரணம் குறித்த எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.