
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 40 வயது பெண். இவர் அருகில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர் தினமும் காலையில் வேலைக்கு நடந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் சம்பவத்தன்று காலை வழக்கம் போல் வேலைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த பரமன்விளையை சேர்ந்த கவின் (25) என்பவர் நடந்து சென்று கொண்டிருந்த அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி அத்துமீற முயன்றதாக தெரிகிறது.
இதனை சற்றும் எதிர்பார்க்காத அப்பெண் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். அதற்குள் கவின் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து அந்த பெண் ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து கவினை போலீசார் கைது செய்தனர்.