நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் ஐடி பெண் இன்ஜினியர் சுத்தியலால் அடித்து கொலை: கணவர் வெறிச்செயல்

2 weeks ago 3

நொய்டா: பீகார் மாநிலத்தை சேர்ந்த நூருல்லா ஹைதர்(55). இவரது மனைவி அஸ்மா கான்(42). இருவரும் நொய்டாவில் வசித்து வந்தனர். இவர்களுக்கு பொறியியல் படிக்கும் ஒரு மகனும், 8ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். நூருல்லா ஹைதர், அஸ்மா கான் இருவரும் மென்பொருள் பொறியாளர்கள். அஸ்மா கான் நொய்டாவில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். ஆனால் நூருல்லா ஹைதர் வேலையில்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் ஐடியில் பணியாற்றும் மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு நூருல்லா கான், அடிக்கடி மனைவியிடம் சண்டை போட்டு வந்துள்ளார். நேற்றும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை மூண்டுள்ளது. சண்டை முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த நூருல்லா கான் வீட்டிலிருந்த சுத்தியலை எடுத்து மனைவி அஸ்மா கானை தலையில் அடித்தே கொன்றுள்ளார். தன் கண் முன் நடந்த இந்த சம்பவம் குறித்து நொய்டா காவல்துறையில் மகள் புகாரளித்தார். அதனடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் அஸ்மா கான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நூருல்லா கானை கைது செய்தனர்.

The post நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் ஐடி பெண் இன்ஜினியர் சுத்தியலால் அடித்து கொலை: கணவர் வெறிச்செயல் appeared first on Dinakaran.

Read Entire Article