நகையை பறித்த 4 வாலிபர்கள் கைது

3 weeks ago 3

 

ஆர்.எஸ்.மங்கலம், டிச. 28: ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடி அருகே உள்ள கொத்தியார்கோட்டையைச் சேர்ந்தவர் மல்லுராஜா மனைவி மாரி (67). இவர் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்க செயினை மர்மநபர்கள் நேற்று முன்தினம் திருடி சென்றனர். இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் பால்குளத்தை சேர்ந்த கார்த்திக் (20) என்பவரை சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் இச்சம்பவத்தில் திருப்பாலைக்குடி காந்தி நகர் பகுதியை சேர்ந்த விமல்ராஜ் (22), மாதேஷ் (21), ராமஜெயம் (24) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அதனடிப்படையில் மேற்கண்ட 4 நபர்களையும் போலீசார் கைது செய்தனர்.

The post நகையை பறித்த 4 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Read Entire Article