நகரச் செய​லா​ளர் பதவிக்கு ரூ.15 லட்​சம் பேரம்! - விழுப்​புரம் மாவட்ட தவெக செய​லா​ளர் மீது தடாலடி புகார்

7 hours ago 2

விழுப்​புரத்​தில் மகளிர் தினத்தை முன்​னிட்டு கடந்த 8-ம் தேதி நல உதவி​கள் வழங்​கும் நிகழ்ச்​சியை தவெக பொதுச் செய​லா​ளர் புஸ்ஸி ஆனந்த் தலை​மை​யில் ஏற்​பாடு செய்​திருந்​தார்​கள். இதை வைத்து விழுப்​புரம் தவெக-வுக்​குள் இப்​போது ஏகப்​பட்ட களேபரங்​கள் வெடித்​துள்​ளன. இந்த நிகழ்ச்​சிக்​காக வந்த புஸ்ஸி ஆனந்தை வரவேற்​ப​தற்​காக, திமுக-​விலிருந்து வந்த ‘கில்​லி’ சுகர்ணா மாற்​றுக் கட்​சிகளில் இருந்து தவெக-​வில் இணைய வந்​திருந்த சுமார் 500 பேரை காந்தி சிலை அருகே திரட்டி இருந்​தார்.

இவருக்​கும் விழுப்​புரம் (தொகு​தி) மாவட்​டச் செய​லா​ள​ரான ‘குஷி’ மோகன் என்ற மோகன்​ராஜுக்​கும் அவ்​வள​வாய் ஒத்​துப்​போக​வில்லை என்​கி​றார்​கள். இதனால், சென்​னையி​லிருந்து வந்த புஸ்ஸி ஆனந்தை பாதி வழி​யிலேயே மடக்​கிய ‘குஷி’ மோகன், அவரை தனது பைக்​கில் ஏற்றி குறுக்கு வழி​யில் நிகழ்ச்சி நடந்த இடத்​துக்கு அழைத்​துச் சென்​று​விட்​டா​ராம்.

Read Entire Article