ஈரோடு,
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே சூசைபுரம் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிட்டுள்ளதாக தாளவாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது தோட்டத்தில் 4 கஞ்சா செடிகள் பயிரிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து 4 கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிட்ட விவசாயி சுப்பிரமணி (வயது 63) என்பவரை கைது செய்தனர்.