தோட்டத்திற்குள் புகுந்த கடமான்

2 months ago 11

 

வருசநாடு, நவ.20: மயிலாடும்பாறை அருகே சிறப்பாறை கிராம மலைப்பகுதியில் கடமான்கள் அதிக அளவில் உள்ளது. நேற்று மாலை மலைப்பகுதியில் இருந்து சுமார் 3 வயது மதிக்கத்தக்க ஆண் கடமான் சிறப்பாறை கிராமத்திற்குள் நுழைந்தது. அப்போது தெருநாய்கள் விரட்டியதால் கடமான் பயத்தில் விவசாய பகுதிக்குள் ஓடிச் சென்றது.

தகவலறிந்த கண்டமனூர் வனத்துறையினர் சிறப்பாறை கிராமத்திற்கு சென்று பாதுகாப்பான முறையில் கடமானை மீண்டும் மலைப்பகுதிக்கு விரட்டினர். இதற்கிடைடையே கடமான் நுழைந்ததால் அதே கிராமத்தைச் சேர்ந்த அருள் என்பவரின் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த காலிபிளவர் செடிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனை கண்டமனூர் வனத்துறையினர் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

The post தோட்டத்திற்குள் புகுந்த கடமான் appeared first on Dinakaran.

Read Entire Article