தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தியில் முகப்பு பக்கம்: வருத்தம் தெரிவித்தது எல்.ஐ.சி.

2 hours ago 2

சென்னை: கடும் எதிர்ப்பை தொடர்ந்து எல்.ஐ.சி. இணையதளத்தின் முகப்பு பக்கத்தை ஆங்கிலத்தில் மாற்றியது. இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் வலைதளப் பக்கம் ஆங்கிலத்தில் செயல்பட்டு வந்த நிலையில், இன்று காலை அதன் இணையதள வலைதளப் பக்கம் முழுக்க இந்தி மொழியில் மட்டுமே இயங்கியது. மேலும் மொழி தேர்வு செய்யும் பட்டன் தேர்வும், ஹிந்தி மொழியில் இருந்ததால் மொழி மாற்றம் செய்வதும் இந்தி தெரியாத மற்ற மொழி பேசும் மக்களுக்கு சவாலானதாக அமைந்தது.

மொழி என்பதை குறிக்கும் “பாஷா” என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் ஆங்கிலத்தை தேர்வு செய்தால் மட்டுமே ஆங்கில பக்கத்திற்கு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. எல்ஐசி வலைப்பக்கத்தில் இந்தி மட்டுமே இருந்ததால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. இந்தியை திணிக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதாக கண்டனங்கள் எழுந்தன. இணையதளம் இந்தியில் இருந்ததற்கு முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்தி சர்ச்சைக்கு தீர்வு காணப்பட்டு விட்டதாக எல்ஐசி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஆங்கிலம், இந்தி மொழிகளில் வரும் வகையில் இணையதளம் சரிசெய்யப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தி மொழி மட்டுமே இணையதளத்தில் இருந்தது. இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டது. மக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறோம் என்று கூறியுள்ளது.

The post தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தியில் முகப்பு பக்கம்: வருத்தம் தெரிவித்தது எல்.ஐ.சி. appeared first on Dinakaran.

Read Entire Article