தொழில்நுட்ப தேர்வில் 281 பேர் ஆப்சென்ட்

2 months ago 11

 

ராமநாதபுரம்,பிப்.18: ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று டிஎன்பிஎஸ்சி மூலம் டிப்ளமோ, ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு (நில அளவர் மற்றும் வரைவாளர் பணி) இணையவழியில் தேர்வு நடத்தப்பட்டது. மாவட்டத்தில் இத்தேர்விற்கு 437 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் நேற்று 281 பேர் ஆப்சென்ட் ஆகியிருந்தனர். 156 பேர் மட்டும் தேர்வு எழுதினர்.  ராமநாதபுரம், பரமக்குடியில் 4 மையங்களில் நடந்தது.

ராமநாதபுரம் மையத்தில் இணைய வழியில் நடைப்பெற்ற தேர்வினை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டார். இத்தேர்வினை கண்காணிக்க மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களாக பரமக்குடி சப்.கலெக்டர் அபிலாஷா கவுர், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜமனோகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டு தேர்வு நடைபெற்றது. மேலும் தமிழ்நாடு அரசு தேர்வாணைய அலுவலர் சரவணன் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் தேர்வு நடைபெற்ற மையங்களில் பணியமர்த்தப்பட்டிருந்தனர். இத்தேர்வானது காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற்றது.

The post தொழில்நுட்ப தேர்வில் 281 பேர் ஆப்சென்ட் appeared first on Dinakaran.

Read Entire Article