திருத்தணி, மே 25: திருத்தணியில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நகரி பைபாஸ் ரோடு அருகில் ஹோலோபிளாக் யார்டில் ஆந்திர மாநிலம் நகரி அருகே பெரிய முடிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரகுபதி (38), சுரேந்திரா (27) ஆகிய 2 பேரும் வேலை செய்து வருகின்றனர். ேநற்று அதிகாலை இவர்கள் இருவரும் காலைக்கடன் கழிக்க சென்றபோது, சாலையில் சென்ற அடையாளம் தெரியாத 3 பேர் பைக்கில் வந்து இருவரையும் மிரட்டி அவர்களிடம் இருந்த 2 செல்போன்களை பறித்துச் சென்றுள்ளனர். திருத்தணி போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
The post தொழிலாளர்களை மிரட்டி செல்போன் பறிப்பு appeared first on Dinakaran.