தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை

3 months ago 19

 

மதுரை, அக். 10: கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில், வெளி மாநில கட்டுமான தொழிலாளர்களுக்கான உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
இதுகுறித்து, தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில், வெளி மாநில கட்டுமான தொழிலாளர்களை உறுப்பினராக பதிவு செய்வதற்காக மதுரை மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் நேற்று சிறப்பு முகாம் நடந்தது.

அதில், மாவட்ட நீதிமன்றம் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள வெளி மாநில கட்டுமான தொழிலாளர்கள் tnuwwb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டனர். கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்ய விரும்பும் தொழிலாளர்கள், எல்லீஸ் நகர், வீட்டு வசதி வாரிய வளாகத்தில் உள்ள தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்திற்கு ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், புகைப்படம் மற்றும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்போன் ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

 

The post தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை appeared first on Dinakaran.

Read Entire Article