சிவகங்கை, பிப்.7: புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல் உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:2025-2026ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற் பள்ளிகள் தொடங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், புதிய தொழிற் பிரிவுகள், கூடுதல் அலகுகள் துவங்குதல் உள்ளிட்டவைகளுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற் பிரிவுகள், கூடுதல் அலகுகள், தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்பக் கட்டணமாக ரூ.5,000 மற்றும் ஆய்வுக் கட்டணமாக ரூ.8,000 செலுத்த வேண்டும். 28.2.2025ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பம் appeared first on Dinakaran.