தொப்பம்பட்டி தேவத்தூரில் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்: அமைச்சர் பார்வையிட்டார்

2 months ago 9

ஒட்டன்சத்திரம், நவ. 17: ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொப்பம்பட்டி ஒன்றியம் தேவத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமில் புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்குதல், பெயர்- முகவரி திருத்தம் உள்ளிட்ட பணிகள் நடந்தன.

இதனை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்விழ் போது ஒன்றிய செயலாளர் தங்கராஜ், ஒன்றிய தலைவர் சத்யபுவனா, வட்டாச்சியர் பழனிச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.

The post தொப்பம்பட்டி தேவத்தூரில் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்: அமைச்சர் பார்வையிட்டார் appeared first on Dinakaran.

Read Entire Article