தொண்டி, மே 26: தொண்டியில் மின் கசிவு காரணமாக வீடு தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். கிழக்கு கடற்கரை சாலை தொண்டி பழைய பேருந்து நிலையம் அருகில் சதக்கத்துல்லா மகன் பசீர் முகமதுக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இதில் இஸ்மாயில்(65) என்பவர் தங்கி உள்ளார். நேற்று அதிகாலை அவர் வெளியூருக்கு சென்று விட்டார். அந்த நேரத்தில் அந்த அறையில் உள்ள வாட்டர் ஹீட்டரில் உள்ள மின் ஸ்விட்ச் அணைக்காததால் தொடர்ந்து ஹிட்டாகி வெப்பநிலை அதிகரித்து தீப்பற்றிக் கொண்டதாக தகவல் தெரிய வருகிறது. தீயால் வீட்டில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தன. அதிஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் இல்லை. தகவல் அறிந்து வந்த திருவாடானை தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
The post தொண்டியில் மின்கசிவால் தீப்பிடித்து எரிந்த வீடு appeared first on Dinakaran.