தொண்டி அருகே ரோட்டில் மழைநீர் தேங்கி மாணவர்கள் கடும் அவதி

1 month ago 9

 

தொண்டி, டிச.8: தொண்டி அருகே உள்ள தினையத்தூர் பகுதியில் மாவூர் கிராமத்திற்கு செல்வதற்கான விலக்கு ரோடு உள்ளது. இந்த ரோடு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து செல்லும் கிராமச் சாலையாகும். இந்த ரோடு முழுவதும் மழை நீர் தேங்கி குளம் போல் உள்ளது. இவ்வழியாக செல்லும் பொதுமக்கள் பள்ளி செல்லும் மாணவ,மாணவிகள் கடும் அவதிப்படுகின்றனர். நிரந்தர தீர்வு கான பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறியது, இந்த ரோட்டின் வழியாகத்தான் கிராம மக்கள் பள்ளி செல்லும் குழந்தைகள் செல்ல வேண்டியுள்ளது. குளம் போல் தண்ணீர் தேங்கி கிடப்பதால், சிரமமாக உள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post தொண்டி அருகே ரோட்டில் மழைநீர் தேங்கி மாணவர்கள் கடும் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article