தொடுகாடு ஊராட்சி தலைவர் தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கு: திருவள்ளூர் கலெக்டர் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

1 month ago 20

திருவள்ளூர், செப். 29: திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய தொடுகாடு ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்துவந்த பி.வெங்கேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2020 முதல் தொடுகாடு ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்தேன். எனது ஊராட்சி மன்றத்தில் 26க்கும் மேற்பட்ட பெரும் தொழில் நிறுவனங்கள் அரசின் எந்த அனுமதியும் இல்லாமல் இயங்கி வருகிறது. ஊராட்சி மன்றத்திற்கு வரியினங்களை செலுத்தாமல் செயல்பட்டு வந்ததை பல்வேறு பதிவு கடிதங்கள் அனுப்பியும் கிராமசபை தீர்மானம் போட்டும் மாவட்ட கலெக்டர் மற்றும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கடந்த 2023ல் வரிவசூல் செய்துதர மாவட்ட கலெக்டருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.ந்த உத்தரவை கலெக்டர் பின்பற்றாமல் ஊராட்சிக்கு குந்தகம் விளைவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர், உயர் நீதிமன்றத்தில் தவறான தகவல்களை தெரிவித்ததாக என்னை பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். ஊராட்சியில் 9 உறுப்பினர்கள் உள்ள நிலையில் அதில் 6 உறுப்பினர்கள் 9 மாதங்கள் ஊராட்சி மன்ற கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அந்த உறுப்பினர்களை வைத்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தி என்னை தகுதி நீக்கம் செய்துள்ளார். எனவே, விதிகளுக்கு முரணாக தகுதி நீக்கம் செய்த கலெக்டரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் வி.ரகுபதி, வி.எஸ்.சுரேஷ் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு கலெக்டர் பதில் தருமாறு உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post தொடுகாடு ஊராட்சி தலைவர் தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கு: திருவள்ளூர் கலெக்டர் பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article