
சென்னை,
கடந்த சில வாரமாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது.
இந்த சூழலில், பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென ஏற்படும் போர் பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து பின்னர் கணிசமாக குறைகிறது. அந்த வகையில், கடந்த 14-ந் தேதி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.9,320-ம், பவுனுக்கு ரூ.74,560 என விற்பனையானது.
அதன் பின்னர் 21-ந் தேதி முதல் தங்கம் விலை சரிவையே சந்தித்து வருகிறது. 21-ந் தேதி கிராமுக்கு ரூ.9,235-க்கும், பவுன் ரூ.73,880-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 22-ந் தேதி விலையில் எந்த மாற்றமும் இல்லை. 23-ந் தேதி பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.73,840-க்கு விற்னையானது. கடந்த 24-ந் தேதி கிராமுக்கு ரூ.75-ம், பவுனுக்கு ரூ.600-ம் குறைந்து ஒரு பவுன் ரூ.73,240-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த 25-ந் தேதி தங்கத்தின் விலை மேலும் குறைந்தது. அன்றைய தினம் கிராம் ரூ.9,070 எனவும், பவுன் ரூ.72,560 ஆகவும் விற்பனையானது. 26-ந் தேதி விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்த சூழலில் நேற்றும் தங்கத்தின் விலை குறைந்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.8,985-க்கு விற்பக்கப்பட்டது. பவுனுக்கு ரூ.680 குறைந்து ரூ.71,880-க்கு விற்பனையானது. மேலும் வெள்ளி கிராம் ரூ.120-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்றும் தங்கத்தின் விலை தொடர் சரிவை கண்டுள்ளது. இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.8,930-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.71,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.119-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1, 400 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.