தொடர்ந்து 3வது நாளாக விலையில் மாற்றமில்லை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.63,520க்கு விற்பனை!!

8 hours ago 2

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வித மாற்றமின்றி சவரனுக்கு ரூ.63,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வித மாற்றமின்றி கிராமுக்கு ரூ.7,940க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தினம் தினம் புதிய உச்சம் தொட்டு இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து இறங்கு முகமாகவே இருந்து வந்தது. கடந்த மாதம் (பிப்ரவரி) 25-ந்தேதி, பவுன் ரூ.64 ஆயிரத்து 600-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு, தங்கம் விலை படிப்படியாக குறைந்தது. தங்கம் விலை கடந்த சனிக்கிழமையும் சற்று குறைந்தது.

ஒரு கிராம் தங்கம் ரூ.20-ம், ஒரு பவுன் தங்கம் ரூ.160-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 940-க்கும், ஒரு பவுன் ரூ.63 ஆயிரத்து 520-க்கும் விற்பனை ஆனது. அதேபோல கடந்த வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.50 குறைந்தது. வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.40-ம், புதன்கிழமை 25-ம் குறைந்தது. தொடர்ந்து 4 நாட்களாக குறைந்த நிலையில், இன்றும் விலை குறையுமா என இல்லத்தரசிகள் எதிர்பார்த்தனர். ஆனால், தங்கம் விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 7,940-க்கும் பவுனுக்கு ரூ. 63,520- ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் , கிராம் ரூ.8,662 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிரமுக்கு ஒரு ரூபாய் கூடியுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.106 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

The post தொடர்ந்து 3வது நாளாக விலையில் மாற்றமில்லை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.63,520க்கு விற்பனை!! appeared first on Dinakaran.

Read Entire Article