தொடர் விடுமுறையால் தினசரி மின்தேவை 5 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு குறைந்தது: சென்னையில் ஆவின் பால் விற்பனையும் சரிவு

3 months ago 12

சென்னை: தமிழகத்தில் தினசரி மின்தேவை16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில்உள்ளது. இது குளிர்காலத்தில் 10 ஆயிரம் மெகாவாட் ஆகவும், கோடை காலத்தில் 20 ஆயிரம் மெகாவாட் ஆகவும் இருக்கும். கோடை காலத்தில், இந்த ஆண்டுமே 2-ம் தேதி மின்தேவை 20,830மெகாவாட் ஆக அதிகரித்தது.இதுவே உச்சபட்ச அளவாகும்.

தமிழகத்தில் அக்டோபரில் வடகிழக்குப் பருவமழை தொடங்கினாலும், செப்டம்பர் மாதத்திலேயே பல மாவட்டங்களில் மழை பெய்யும். இதனால், அந்த மாதம் மின்நுகர்வு வழக்கத்தைவிட குறையும். ஆனால், இந்த ஆண்டு செப்டம்பரில் எப்போதும் இல்லாத அளவுக்குகோடை காலத்தைப் போல வெயில்சுட்டெரித்தது. அதன் காரணமாக,தினசரி மின்தேவை 17,500 மெகாவாட் வரை அதிகரித்தது.

Read Entire Article