தொடர் விடுமுறை: சென்னையிலிருந்து 3,120 பேருந்துகள் இயக்கம் - 1.62 லட்சம் பேர் பயணம்

1 month ago 13

சென்னை,

வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு நேற்று சென்னையிலிருந்து 3,120 பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், அதன்மூலம் 1.62 லட்சம் பேர் பயணம் செய்ததாகவும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரின் அறிவுறுத்தலின்படி, வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறையை (ஆயுதபூஜை) முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பேருந்துகளின் இயக்கம் நேற்று (10/10/2024) நள்ளிரவு 12.00 மணி நிலவரப்படி, சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 1,028 பேருந்துகளும் ஆக நேற்றைய தினம் மொத்தம் 3,120 பேருந்துகள் இயக்கப்பட்டன. இவற்றில் 1,62,240 பயணிகள் பயணித்துள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article