தொடர் விடுமுறை எதிரொலி பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

3 months ago 17

*படகு சவாரி செய்து மகிழ்ச்சி

புவனகிரி : பரங்கிப்பேட்டை அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையம் உலக பிரசித்தி பெற்றது. இங்கு இயற்கை எழில் கொஞ்சும் சுரபுன்னை காடுகளுக்குள் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைவார்கள். வார நாட்களில் குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்வார்கள். ஆனால் விடுமுறை நாட்களில் அதிகமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைவர். கடந்த சில தினங்களாக தொடர் விடுமுறை என்பதால் பிச்சாவரத்தில் கூட்டம் அலைமோதியது.

வெள்ளிக்கிழமை ஆயுத பூஜை, சனிக்கிழமை விஜயதசமி பூஜை என தொடர்ந்து பண்டிகை கால விடுமுறையாக இருந்தது. அதைத்தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பிச்சாவரத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் துடுப்பு படகுகளிலும், மோட்டார் படகுளிலும் சவாரி செய்து பிச்சாவரம் சுரபுன்னை காடுகளின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். அதிக சுற்றுலா பயணிகளின் வரத்தால் நேற்று பிச்சாவரம் சுற்றுலா மையம் களை கட்டியது.

The post தொடர் விடுமுறை எதிரொலி பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Read Entire Article