தொடர் மழை: நெல்லை மாவட்ட அணைகள் நீர்மட்டம் உயர்வு

2 months ago 10

நெல்லை,

மேற்கு தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நீர்வரத்து 1,186 கன அடியாக அதிகரித்தது.

143 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் மேலும் ஒரு அடி உயர்ந்து, 93.40 அடியாக உள்ளது. இதேபோல் 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 2½ அடி உயர்ந்து 107 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கும் நீர்வரத்து 143 கன அடியாக அதிகரித்து உள்ளது.

கடனாநதி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 108 கன அடியாகவும், ராமநதி அணைக்கு நீர்வரத்து 55 கன அடியாகவும் அதிகரித்து உள்ளது.

 

Read Entire Article