*விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
நிலக்கோட்டை : தொடர் கனமழை காரணமாக, இரண்டாண்டுகளுக்கு பிறகுகொடைரோடு சிறுமலையாறு நீர்த்தேக்கம் நிரம்பியுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை தொடமர்ந்தது. இதனால், கொடைரோடு அருகே சிறுமலை அடிவாரத்தில் உள்ள சிறுமலை ஆறு நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதன் எதிரொலியாக காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அணையில் முழுமையாக தண்ணீர் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால் வறட்சியான இப்பகுதியில் குடிநீர் பிரச்சனை தீரும் என்பதுடன், அப்பகுதியில் உள்ள விளை நிலங்களுக்கு பாசனத்திற்குதண்ணீர் கிடைக்கும். மேலும் நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இத்துடன் அணையில் மறுகால் பாய்வதால், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், அப்பகுதியில் ஆனந்தமாக குளித்து வருகின்றனர்.
The post தொடர் கனமழை காரணமாக சிறுமலையாறு நீர்த்தேக்கம் நிரம்பி மறுகால் பாய்கிறது appeared first on Dinakaran.