சென்னை : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை நிறைவு அடைந்தது. அடுத்த கூட்டம் ஐதராபாத்தில் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். 3 மணி நேரமாக நடைபெற்ற கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு நியாயமான முறையில் நடைபெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 4 மாநில முதல்வர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு கூடாது என வலியுறுத்தினர்.
The post தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை நிறைவு!! appeared first on Dinakaran.