தைவானை சுற்றி சீன ராணுவம் 2-வது நாளாக போர் பயிற்சி

22 hours ago 1

தைபே சிட்டி,

1949-ல் தனிநாடாக பிரிந்து சென்ற தைவானை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனா துடித்து வருகிறது. இதற்காக தைவான் அருகே அடிக்கடி போர்ப்பயிற்சி மற்றும் எல்லைக்குள் போர் விமானங்களை அனுப்பி பதற்றத்தை தூண்டுகிறது. தைவான் எல்லை பகுதியில் சீனாவின் அத்துமீறல் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம்சாட்டி உள்ளது.

இந்நிலையில், தைவானை அச்சுறுத்தும் வகையிலும், தைவானை சுற்றி பாதுகாப்பு பயிற்சிகளை மேற்கொள்ளும் வகையிலும் தனது ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையை சீனா அனுப்பியுள்ளது.

தொடர்ந்து 2-வது நாளாக தைவான சுற்றி சீன ராணுவம் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த பயிற்சியில் சீன கடற்படைக்கு சொந்தமான போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பிரிவினைவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக இந்த போர் பயிற்சி மேற்கொள்ளப்படுவதாக சீன ராணுவம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article