விருதுநகர்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேவை அதிகரிப்பால் விருதுநகர் மார்க்கெட்டில் பருப்புகளின் விலை உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி (அடைப்பிற்குள் கடந்த வார விலை நிலவரம்), கடலை எண்ணெய் 15 கிலோ டின் ரூ.2,650, நல்லெண்ணெய் ரூ.5,775, பாமாயில் ரூ.2,150(2,180)க்கு விற்பனையானது. முண்டு வத்தல் 100 கிலோ ரூ.7 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம், நாடு வத்தல் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம், குண்டூர் வத்தல் ரூ.13 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம், மல்லி 40 கிலோ லயன் ரூ.3,650 முதல் ரூ.3,700, மல்லி நாடு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.4,200 வரை விற்பனையானது.
துவரம் பருப்பு ரூ.10,700 (10,500), துவரம் பருப்பு லயன் ரூ.13,500 முதல் ரூ.14,000, உருட்டு உளுந்தம் பருப்பு 100 கிலோ ரூ.12 ஆயிரம், உருட்டு உளுந்தம் பருப்பு பர்மா ரூ.10,200(9,800), தொலி உளுந்தம் பருப்பு ரூ.9,800, பாசிப்பருப்பு 100 கிலோ ரூ.9,850, கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ.4,200, எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ.2,100, உளுந்து நாடு 100 கிலோ ரூ.9,100, லயன் உளுந்து ரூ.9 ஆயிரம், பாசிப்பயறு நாடு ரூ.8,150, பாசிப்பயறு ரூ.7 ஆயிரம், மசூர் பருப்பு 100 கிலோ ரூ.10,100 என விற்பனையானது.
The post தைப்பொங்கல் எதிரொலி பருப்புகள் விலை உயர்வு: பாமாயில் விலை குறைவு appeared first on Dinakaran.