சென்னை: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிக்கை: ஜன.29ம் தேதி தை அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் புண்ணியஸ்தலமான ராமேஸ்வரத்திற்கு சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி வழங்குவதற்கு ஏதுவாக ஜன.28ம் தேதி சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும், பெங்களூருவில் இருந்தும் ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதன்படி, 28ம் தேதி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்தும், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து ராமேஸ்வரத்திற்கும், 29ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து சென்னை கிளாம்பாக்கம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேற்கூறிய இடங்களிருந்து www.tnstc.in மற்றும் டிஎன்எஸ்டிசி செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
The post தை அமாவாசை 28ம் தேதி ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்து துறை தகவல் appeared first on Dinakaran.