தேவி ஸ்ரீ பிரசாத் குறித்து பேசிய பிரபல பாடகி

2 weeks ago 3

மும்பை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவரது நடிப்பில் வெளியாக உள்ள படம் 'தண்டேல்'. இதில், சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். 'கார்த்திகேயா 2' திரைப்படத்தின் மூலம் பிரபலமான சந்து மொண்டேட்டி இப்படத்தை இயக்கியுள்ளார்.

கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னிவாஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஸ்ரீகாகுளத்தில் உள்ள மீனவர்களின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் அடுத்த மாதம் 7-ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் 3 பாடல்கள் இதுவரை வெளியாகி இருக்கின்றன. இதில் மிகவும் விரும்பப்பட்ட பாடல் 'நமோ நமச்சிவாய'. இதனை இந்தியில் பாடியவர் சலோனி தக்கர். இந்நிலையில், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் குறித்து பாடகி சலோனி தக்கர் சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

"நான் தேவி ஸ்ரீ பிரசாத்தின் மிகப்பெரிய ரசிகை. ஏ.ஆர். ரகுமானுக்குப் பிறகு அவரைதான் மிகப் பெரியவராக கருதுகிறேன். அவரது உதவியாளரிடமிருந்து, தண்டேல் படத்தில் "நமோ நமச்சிவாய" பாடலைப் பாடுவதற்கு எனக்கு அழைப்பு வந்தபோது நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்' என்றார்

Read Entire Article