தேவர் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

2 months ago 12

மதுரை,

பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதில் பங்கேற்று அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த நிலையில், இன்று கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்த்தினார். பின்னர் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர் சகோதரர்கள் சிலைக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு,பி. மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ராஜ கண்ணப்பன், டி.ஆர்.பி.ராஜா, மகேஷ் அன்பில் பொய்யாமொழி, கீதா ஜீவன், கோ தளபதி. எம்.எல்.ஏ.மற்றும் பலர் உடன் இருந்தனர்.

 

 

Read Entire Article