தேவரியம்பாக்கத்தில் ரூ.1.20 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம்: முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்

12 hours ago 3

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவரியம்பாக்கத்தை சுற்றிலும் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டும் எனில் வாலாஜாபாத் அல்லது அய்யம்பேட்டை, தென்னேரி ஆகிய பகுதிகளில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கர்ப்பிணி பெண்கள் சென்று வந்தனர். இந்நிலையில், சுற்றுவட்டார கிராமங்களில் மையப் பகுதியாக விளங்கும் தேவரியம்பாக்கம் ஊராட்சியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டித்தரவேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் வலியுறுத்தி வந்தனர்.

அதன் அடிப்படையில், தமிழக அரசு ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் அஜய்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணை தலைவர் சேகர் முன்னிலை வகித்தார்.

இதில், சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சுகாதார பெட்டகங்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கன்றுகள் நட்டப்பட்டன. இதனைத் அடுத்து ஆரம்ப சுகாதார கட்டிடத்தின் அமைப்புகளையும் எந்தெந்த அறைகளில் என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது என்பது குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில், சுகாதாரப்பணிகள் துறையின் இணை இயக்குநர் நளினி, மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில், வாலாஜாபாத் பேரூர் செயலாளர் பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் சஞ்சய் காந்தி, ஒன்றிய துணை செயலாளர் குப்புசாமி உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவத்துறை சார்ந்த அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மாவட்ட ஒன்றிய திமுக நிர்வாகிகள், மகளிர் அணியை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post தேவரியம்பாக்கத்தில் ரூ.1.20 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம்: முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Read Entire Article