'தேவரா' படம் : வெளியான 2 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

3 months ago 30

சென்னை,

கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவான படம் 'தேவரா பாகம்-1''. இதில் ஜான்வி கபூர், சைப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் ஜான்வி கபூர் தென்னிந்திய திரையுலகில் கதாநாயகியாக கால் பதித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

ஜூனியர் என்டிஆரின் 30வது படமான தேவரா நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவான பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பங்களிப்பைச் செய்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

இந்த படம் முதல் நாளில் உலகளவில் 172 கோடி ரூபாய் வசூல் செய்ததாக படக்குழு அதிரகாரபூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில், தேவரா திரைப்படம் வெளியான 2-வது நாளில் உலகளவில் ரூ. 243 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் இப்படம் 500 கோடி வசூலை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான கோட் படத்தின் முதல் 2 நாள் வசூலை விட தேவரா திரைப்படம் அதிக வசூலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

The wave of #Devara's rage FLOODS the Box Office putting ALL TERRITORIES on notice! + - https://t.co/iW0OygM2Qc#BlockbusterDevaraMan of Masses @tarak9999 #KoratalaSiva #SaifAliKhan #JanhviKapoorpic.twitter.com/MzOI32kUN2

— KVN Productions (@KvnProductions) September 29, 2024
Read Entire Article