*கலெக்டர் தலைமையில் நடந்தது
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டியில் நேற்று காலை கலெக்டர் தலைமையில் நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி நடைபெற்றது.தேனி மாவட்டத்தில் தமிழக முதலமைச்சரின் 108வது நாள், நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி தேவதானப்பட்டியில் நேற்று காலை நடைபெற்றது. இந்த நடப்போம் நலம் பெறுவோம் நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார்.
மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர் முருகேசன், தேவதானப்பட்டி பேரூராட்சி சேர்மன் முருகேஸ்வரி ராமையா, செயல் அலுவலர் விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேவதானப்பட்டி காமாட்சியம்மன் கோயில் தோரணவாயில் அருகில் இருந்து மஞ்சளாறு அணை சென்று, அங்கிருந்து மீண்டும் துவங்கிய இடம் வரை நடந்தனர். இந்த நிகழ்ச்சியில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post தேவதானப்பட்டியில் நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி appeared first on Dinakaran.