தேவகோட்டை அருகே அண்ணன், தம்பிக்கு அரிவாள் வெட்டு: தலைமறைவானவருக்கு போலீஸ் வலை

3 weeks ago 3

 

தேவகோட்டை, டிச. 28: தேவகோட்டை அருகே தகராறில் அண்ணன், தம்பியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியவரை போலீசார் தேடி வருகின்றனர். தேவகோட்டை அருகே உள்ள நாட்டாவளி-சிறுவளி கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையம்மாள் (75). இவர், நேற்று முன்தினம் மாலை அந்தப் பகுதியில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த காளிமுத்து (45) என்பவர் மூதாட்டி மீது இரண்டு முறை எச்சிலை உமிழ்ந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மூதாட்டி தனது மகன்களான சண்முகம், மெய்யப்பன் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தாழையூர் விலக்கு பகுதியில் காளிமுத்துவை பார்த்த சகோதரர்கள் இருவரும் தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த காளிமுத்து வாங்கரிவாளால் அண்ணன், தம்பிகளை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதில் காயமடைந்த சகோதரர்கள் இருவரும் சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு முதலுதவிக்கு பிறகு தேவகோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஆறாவயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான காளிமுத்துவை தேடி வருகின்றனர்.

The post தேவகோட்டை அருகே அண்ணன், தம்பிக்கு அரிவாள் வெட்டு: தலைமறைவானவருக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Read Entire Article