தேர்தல் விதிமுறைகளை மாற்றியதற்கு எதிரான வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

3 hours ago 3

டெல்லி : தேர்தல் விதிமுறைகளை மாற்றியதற்கு எதிரான வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. வாக்குப்பதிவின்போது மின்னணு ஆவணங்களை மக்கள் பார்வைக்காக வெளியிடுவதை தடுக்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது. முக்கிய திருத்தங்களை மக்களின் கருத்தை கேட்காமல் தன்னிச்சையாக தேர்தல் ஆணையம் திருத்த முடியாது என்று காங்கிரஸ் மனுவில் குற்றம் சாட்டி உள்ளது.

The post தேர்தல் விதிமுறைகளை மாற்றியதற்கு எதிரான வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Read Entire Article