தேர்தல் பத்திரங்கள் விவகாரம்; ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குபதிவு: பெங்களூரு கோர்ட் அதிரடி

1 month ago 9

ெபங்களூரு: தேர்தல் பத்திரங்கள் விவகாரம் தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குபதிய பெங்களூரு கோர்ட் அதிரடி உத்தரவிட்டது. கர்நாடகா மாநிலம் ஜனாதிகர் சங்கர்ஷ் பரிஷத் (ஜேஎஸ்பி) அமைப்பின் இணைத் தலைவர் ஆதர்ஷ் ஐயர் என்பவர், கடந்த ஏப்ரல் மாதம் பெங்களூரு சிறப்பு மக்கள் பிரதிநிதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, பாஜக தேசியத் தலைவர்கள், கர்நாடக மூத்த தலைவர்கள் நளின் குமார் கட்டீல், பி.ஒய்.விஜயேந்திரா உள்ளிட்டோர் தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறிக்கின்றனர்.

இவ்விசயத்தில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறிப்பதாக எழுந்துள்ள புகார் குறித்து பெங்களூரு திலக் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் விசாரணையை அக்டோபர் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

The post தேர்தல் பத்திரங்கள் விவகாரம்; ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குபதிவு: பெங்களூரு கோர்ட் அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article