தேனி, ஜூலை 7: தேனியில் மாவட்ட ஐக்கிய ஜமாத் சார்பில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. தேனியில் மாவட்ட ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில், கடந்த கல்வி ஆண்டில் நடந்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற இஸ்லாமிய மாணவ மாணவியர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு ஓய்வு பெற்ற மாவட்ட மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குனர் சையது சுல்தான் இப்ராஹிம் தலைமை வகித்தார்.
தொழிலதிபர் பொன்ராஜ் கொந்தாளம் முன்னிலை வகித்தார்.
தேனி புது பள்ளிவாசல் தலைவர் சார்புதீன் வரவேற்பு பேசினார். ஓய்வு பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அப்துல் ஜப்பார் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். இவ்விழாவில் மாநில சட்ட ஆட்சி மொழி ஆணைய உறுப்பினரும், முன்னாள் மாவட்ட நீதிபதியுமான முகமது ஜியாவுதீன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். திருச்சி தொழில் அதிபர் கலீல் ரஹ்மான் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். இவ்விழாவின் போது பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற 533 மாணவ மாணவியர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன இவ்விழாவில் மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர் உறவினர்கள் உட்பட 1500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
The post தேனியில் ஐக்கிய ஜமாத் சார்பில் மாணவர்களுக்கு பரிசு வழங்கல் appeared first on Dinakaran.