தேசிய மாஸ்டர்ஸ் ஆக்கி போட்டி: மராட்டியத்தை வீழ்த்திய கேரளா

5 hours ago 2

சென்னை,

தமிழ்நாடு ஆக்கி சங்கம் சார்பில் முதலாவது தேசிய மாஸ்டர்ஸ் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 5-வது நாளான நேற்று நடந்த மகளிர் பிரிவு ஆட்டம் ஒன்றில் கர்நாடக அணி 2-0 என்ற கோல் கணக்கில் இமாச்சலப் பிரதேசத்தை சாய்த்தது.

மற்றொரு ஆட்டத்தில் கேரளா 5-1 என்ற கோல் கணக்கில் மராட்டியத்தை துவம்சம் செய்தது. ஆண்கள் பிரிவு ஆட்டங்களில் மராட்டியம் 2-0 என்ற கோல் கணக்கில் சண்டிகாரையும், அரியானா 5-3 என்ற கோல் கணக்கில் கர்நாடகாவையும் தோற்கடித்தது.

Read Entire Article