ஈரோடு,ஜன.31: தேசிய பேரிடர் மீட்புக் குழு ஆலோசனை கூட்டம் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். இதில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து, இன்று (31ம் தேதி) ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள காடையாம்பட்டி கிராமத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது, பாதுகாப்பது உள்ளிட்டவை குறித்து நடைபெறவுள்ள ஒத்திகை பயிற்சியில் பங்கேற்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் குமிலி வெங்கட்ட அப்பால நாயுடு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), முகமது குதரத்துல்லா, பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியர் அங்கமுத்து, பேரிடர் மீட்புக் குழு துணை கமாண்டண்ட் வைத்தியலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post தேசிய பேரிடர் மீட்புக் குழு ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.