தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷியா செல்கிறார்

3 hours ago 2

மாஸ்கோ

ரஷிய தலைநகர் மாஸ்கோவில், பாதுகாப்பு சார்ந்த விவகாரங்களுக்கான உயர் பிரதிநிதிகளின் 13-வது சர்வதேச கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. 29-ந் தேதிவரை நடக்கிறது. ரஷிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் செர்ஜி சோய்கு தலைமை தாங்குகிறார்.

அதில் பங்கேற்குமாறு 150-க்கு மேற்பட்ட நாடுகள் மற்றும் 20-க்கு மேற்பட்ட சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷியா செல்கிறார். அதுபோல், பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் ஆசிம் மாலிக் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவரையும் நேருக்குநேர் சந்திக்க வைக்க ரஷியா ஏற்பாடு ெசய்யும் என்று கூறப்படுகிறது.

Read Entire Article