தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.10.60 லட்சத்தில் ஹைமாஸ் விளக்குகள்

3 months ago 17

 

வில்லிபுத்தூர், அக்.17: தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இரண்டு இடங்களில் சுமார் ரூ.10 லட்சத்து 60 ஆயிரம் செலவில் ஹைமாஸ் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
வில்லிபுத்தூர் நகர் காவல் நிலையம் அருகே அமைந்துள்ளது சர்ச் பாண்ட். வில்லிபுத்தூர் நகரில் முக்கிய பகுதியாக விளங்குகிறது. இந்தப் பகுதி வழியாக தினமும் இரவு பகல் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. நெடுஞ்சாலையான இந்த சாலையில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருந்தது. இதனை தொடர்ந்து ஹை மார்ஸ் விளக்கு அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

இந்த நிலையில் சர்ச் பாய்ண்ட் அருகே தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சுமார் ரூ.5,30,000 செலவில் ஹைமாஸ் லைட் அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் முடிவடைந்து உள்ளன. விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என தெரிகிறது. இதே போல் வில்லிபுத்தூர் ராஜபாளையம் நெடுஞ்சாலையில் உள்ள வன்னியம்பட்டி விலக்கு பகுதியில் ஒரு ஹைமாஸ் லைட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு இடங்களிலும் சேர்த்து அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்குகளின் மதிப்பீடு சுமார் ரூ.10 பத்து லட்சத்து 60,000 ஆகும். விரைவில் இரண்டு இடங்களில் பயன்பாட்டிற்கு வர உள்ளதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.10.60 லட்சத்தில் ஹைமாஸ் விளக்குகள் appeared first on Dinakaran.

Read Entire Article