
சென்னை,
முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
"தேர்தல் கூட்டணி குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தேன். விரைவில் மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தி, கூட்டணி குறித்து அறிவிப்போம்.
சென்னை வந்த அமித்ஷா, எங்களை அழைக்காதது வருத்தமளிக்கிறது. கூட்டணி குறித்து நயினார் நாகேந்திரன் உடன் பேச்சுவார்த்தை பேசி வருகிறோம்.
நாங்கள் இதுவரை தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் தொடருகிறோம். இதை யார் விரும்புகிறார்கள், விரும்பவில்லை என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எங்களது நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டோம். "
இவ்வாறு அவர் பேசினார்.