தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆட்சியில் பங்கு என்பதை தேசிய தலைமை தான் முடிவு செய்யும்: சேலத்தில் வானதி சீனிவாசன் பேட்டி

1 week ago 4

சேலம்: பாஜ தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் சேலத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட அவசர நிலை காரணமாக, அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு, லட்சக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர். கலை மற்றும் இலக்கியத்தின் சுதந்திரம் பறிக்கப்பட்டதன் 50ம் ஆண்டை நினைவு கூறும் வகையில், நாடு முழுவதும் மகளிரணி, இளைஞரணி சார்பாக மாதிரி நாடாளுமன்றங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில், ஆட்சியில் பங்கு என்பதை பற்றி, தமிழக பாஜ தலைமை கூற முடியாது.

அதை தேசிய தலைமைதான் முடிவு செய்யும். தேர்தல் நெருங்க சூழ்நிலைகள் மாறும். தேசிய ஜனநாயக கூட்டணி பலம் வாய்ந்த சக்தியாக மாறும். 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். பொதுமக்களை பாதிக்காத வகையில், ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு கிலோ மீட்டருக்கு 5 பைசா வீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பல புதிய ரயில் பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள் தூய்மையாக உள்ளன. இத்தனை பணிகளுக்கு பைசா கணக்கில் மட்டுமே ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

The post தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆட்சியில் பங்கு என்பதை தேசிய தலைமை தான் முடிவு செய்யும்: சேலத்தில் வானதி சீனிவாசன் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article