தேசிய சட்டப் பல்கலை பேராசிரியர் பணியில் சேர்ந்த சுப்ரீம் கோர்ட் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி

5 hours ago 2

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தற்போது தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். கடந்த 2022 நவம்பர் 9ம் தேதி முதல் 2024 நவம்பர் 10ம் தேதி வரை உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய டி.ஒய்.சந்திரசூட், அயோத்தி நில விவகாரம், தனியுரிமை உரிமை, பாலியல் உறவுகளை குற்றமற்றதாக்குதல், சபரிமலை வழக்கு, ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட முக்கிய தீர்ப்புகளை வழங்கியவர். தற்போது ஓய்வுபெற்றுள்ள அவர், தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் புரவலர் பேராசிரியராக சேர்ந்துள்ளார்.

இவரது பணியால் இந்திய சட்டக் கல்வியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. மேலும் அவர், அரசியலமைப்பு ஆய்வு மையம் என்ற ஒரு அமைப்பை நிறுவி, அதன் மூலம் சட்டக் கல்வி ஆராய்ச்சிக்கு வழிகாட்ட உள்ளார். அரசியலமைப்பில் நீதி, மாறுகின்ற அரசியலமைப்பு, அடிப்படை உரிமைகளில் மாறும் விளக்கம் ஆகியவை குறித்து ஆராய்ச்சி நடத்தப்படும் என்பதால், இது மாணவர்களுக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கும் என பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.எஸ்.பாஜ்பாய் தெரிவித்தார். மேலும் இந்திய சட்டக் கல்வியை வலுப்படுத்துவதற்கும், சமூக நீதிக்கு பங்களிக்கவும் அவரது இந்த முயற்சி முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post தேசிய சட்டப் பல்கலை பேராசிரியர் பணியில் சேர்ந்த சுப்ரீம் கோர்ட் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி appeared first on Dinakaran.

Read Entire Article